சட்டை இல்லாமல் உங்களை பார்க்க சகிக்காது: மேற்கத்திய தலைவர்களுக்கு புடின் பதிலடி!
ஜனாதிபதி புடினை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கேலி செய்து இருந்த நிலையில், மேற்கத்திய தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே, மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்குமான அனைத்து நட்புறவுகளும் விரிசலடைய தொடங்கியது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்தன. ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஜெர்மனியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், புடினை விட கடுமையானவர்கள் என உலகிற்கு காட்ட அவரைப்போலவே நாமும் சட்டை இல்லாமல் குதிரை சவாரி செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கேலி செய்து இருந்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: நதிகரையில் ஒதுங்கிய 5 வயது சிறுவன் உடல்: பிரித்தானிய தாயின் கொடூர செயல்!
இந்தநிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள கருத்தில், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது என விமர்சித்துள்ளார்.