வயதாவதை தடுக்கும் புடினின் திட்டம்: மகளின் தலைமையில் நடந்த கூட்டம்
விளாடிமிர் புடினின் மகள் என்று கூறப்படும் மரியா வொரோன்ட்சோவா தலைமையிலான கூட்டத்தில் மானியங்கள் அறிவிக்கப்பட்டன.
வயதாவதை தடுக்கும் அறிவியல்
72 வயதாகும் விளாடிமிர் புடின் ஆயுட்கால நீட்டிப்பு மற்றும் வயதாவதை தடுக்கும் அறிவியலில் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருகிறார்.
சீனாவில் நடந்த இராணுவ அணிவகுப்பில் கூட மனிதர்களின் நீண்ட ஆயுள் குறித்து புடின் விவாதித்தார். அப்போது இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று ஜி ஜின்பிங் கணித்திருந்தார்.
அதற்கு புடின், உயிரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மக்கள் இளமையாக வாழவும், அழியாமையை அடையவும் அனுமதிக்கும் என்று பதிலளித்தார்.
புடின் இவ்வாறு கூறிய நிலையில், Novaya Gazeta Europe என்ற நிறுவனம் ரஷ்யாவின் அரசு அறிவியல் அறக்கட்டளை சமீபத்திய ஆண்டுகளில் முதுமை மற்றும் ஆயுட்கால நீட்டிப்பு குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆதரவை அதிகரித்துள்ளது என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்ய அறிவியல் அறக்கட்டளை (RSF) 2021 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதுமை குறித்த 43 திட்டங்களை ஆதரித்தது என்றும், இது 2016-20ஆம் ஆண்டுகளில் வெறும் 7 திட்டங்களாக மட்டுமே இருந்தது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
முக்கிய மானியங்கள்
இந்த நிலையில்தான் புடினின் மகள் என்று கூறப்படும் மரியா வொரோன்ட்சோவாவின் தலைமையில், பல திட்டங்களுக்கு மானியங்களை ஒதுக்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அறக்கட்டளையின் முக்கிய மானியங்கள் தற்போது ஆண்டுக்கு 4 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபிள் வரை உள்ளன. இவை மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் 2021-2023ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன.
இதில் வயதாவதால் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியின் பங்கு குறித்த ஆய்வுகள் மற்றும் மூளை மற்றும் கண் மாற்றங்களை அல்சைமர் நோயுடன் இணைக்கும் ஆராய்ச்சி ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |