ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி! உக்ரைன் அதிகாரி பரபரப்பு தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி நடந்ததாக உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Ukrayinska Pravda செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவரான Kyrylo Budanov இவ்வாறு கூறினார்.
பிப்ரவரியில் ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு புடினை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள காகசஸ் பிராந்தியத்தின் பிரதிநிதிகளால் ரஷ்ய அதிபர் தாக்கப்பட்டார்.
ஆனால், இந்த கொலை முயற்சியில் இருந்து புடின் தப்பிவிட்டார் Kyrylo Budanov கூறினார்.
நடுக்கடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தீப்பற்றி எரிந்த படகு! பரபரப்பு காணொளி
எனினும், இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் Kyrylo Budanov முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.