உக்ரைனில் வெற்றிக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் புடின்... Donetskகில் குவியும் ரஷ்ய படைகள்!
முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்.
Donetsk பிராந்தியத்தில் குவியும் ரஷ்ய படைகள்.
உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை ரஷ்ய ஜனாதிபதி புடின் நீட்டித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான ஏழு மாதப் போர் நடவடிக்கையில், ரஷ்யாவின் முக்கிய நோக்கமான கிழக்கு உக்ரைனின் Donetsk பகுதியை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் இதுவரை தோல்வியையே தழுவி வருகின்றனர்.
ரஷ்ய படைகளால் அண்டை பிராந்தியமான Luhansk கைப்பற்ற முடிந்தாலும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றுவதில் தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகிறது.
SKY NEWS
இந்தநிலையில், திட்டமிட்டப்படி கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஷ்ய படைகள் தற்போது Donetsk நகருக்கு மேற்கே துருப்புகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
AP
கூடுதல் செய்திகளுக்கு: 3000 டன் உக்ரைன் சோளம்...பாதியில் பழுதடைந்தது சரக்கு கப்பல்: இஸ்தான்புல்லில் தரையிறக்கம்!
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தி இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார் வெளியிட்டுள்ள அறிக்கையில் Donetsk முழுவதையும் ரஷ்யா கைப்பற்றுவது பெரும்பாலும் சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.