ரஷ்ய சட்டமன்றத்தில் அதிபர் புடினுக்கு கடும் கண்டனம்!
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பில் ரஷ்ய சட்டமன்றத்தில் அதிபர் புடினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Primorsky பிரதேசத்தின் சட்டமன்றத்திலே அதிபர் புடினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்தக் காணொளியில், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரிவைச் சேர்ந்த Leonid Vasyukevich, நான்கு சகாக்கள் சார்பாகப் பேசினார்.
அப்போது, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், அதன் எல்லையில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறவும் அதிபர் புடினுக்கு கோரிக்கை விடுத்தார்.
நமது நாடு ராணுவ நடவடிக்கையை நிறுத்தாவிட்டால், நம் நாட்டில் இன்னும் அதிகமானோர் அனாதை ஆவார்கள்.
ரஷ்யா தோற்கவில்லை என்றால் 3ம் உலகப் போர் தொடங்கும்! உக்ரைன் அதிபர் ஆலோசகர் எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கையின் போது, நம் நாட்டுக்கு பெரும் நன்மை செய்யக்கூடிய இளைஞர்கள் இறந்தும், ஊனமுற்றும் வருகின்றனர் என பேசினார்.
இதனையடுத்து, Leonid Vasyukevich-யிடம் அவரது உரையை நிறுத்துமாறு சட்டசபையின் ஆளுநரும் சபாநாயகரும் கூறியுள்ளனர், பின் சட்டமன்றத்திலிருந்து அவரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளனர்.
Депутаты Приморского края потребовали прекратить "спецоперацию" в Украине. Депутат от фракции КПРФ Леонид Васюкевич во время заседания от лица четырех коллег зачитал обращение к президенту с требованием немедленного вывода войск с территории Украины.#Нетвойне #украина #россия pic.twitter.com/oZtvTMLSuo
— Activatica (@Activatica) May 27, 2022