ரஷ்யா தோற்கவில்லை என்றால் 3ம் உலகப் போர் தொடங்கும்! உக்ரைன் அதிபர் ஆலோசகர் எச்சரிக்கை
உக்ரேனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் அல்லது மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான Mykhailo Podolyak எச்சரித்துள்ளார்.
உக்ரேனிய தொலைக்காட்சியில் பேசிய Mykhailo Podolyak, எதிரி தோற்கவில்லை என்றால், இழந்த பிரதேசத்தை மீட்டெடுக்க, பதிலடி கொடுக்க முற்படும் ரஷ்யாவின் கொள்கையும் பேரினவாதமும் பெருகும் என்று எச்சரித்தார்.
இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்றும், இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் அறிந்திருப்பதாகவும், இதனால் அவர்கள் கூடுதல் ஆயுதங்களை வழங்குவதற்கு வழிவகுக்கும் என்றும் Mykhailo Podolyak கூறினார்.
பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, போரில் சமீபத்தில் நாட்களாக பின்னடைவை சந்தித்தது.
ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகம்! ஈரான் அதிரடி அறிவிப்பு
அதேமசமயம், மரியுபோல், கார்கிவ் நகரங்களை ரஷ்யா தொடர்ந்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனிடையே, உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதால், இப்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.