உக்ரைனியர்களுக்கு நிதி சலுகைகளை அறிவித்த ரஷ்யா: புடின் கையெழுத்து
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு வரும் மக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி ரஷ்யாவிற்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களுக்கு 10,000 ரூபிள் (170 அமெரிக்க டொலர்) மாதாந்திர ஓய்வூதியமாக கொடுக்கப்படவுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள், ஊனமுற்றோர் உள்ளிட்ட உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறியவர்கள் ரஷ்யாவுக்கு வருவதற்கான நிதிச் சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ரூபிள் ($170) மாதாந்திர ஓய்வூதிய கொடுப்பனவுகளை அரசாங்க இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளும், கர்ப்பிணி பெண்களும் அதே மாதாந்திர உதவிக்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் குடிமக்களுக்கும், கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்த இரண்டு ரஷ்ய ஆதரவு நிறுவனங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளுக்கும் பணம் செலுத்தப்படும் என்று அந்த ஆணை கூறுகிறது.
பிப்ரவரி 18 அன்று, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து ரஷ்யாவிற்கு வந்த ஒவ்வொரு நபருக்கும் 10,000 ரூபிள் செலுத்துமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், மாஸ்கோ உக்ரேனியர்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளை வழங்கி வருகிறது.
உக்ரேனிய அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறும் ரஷ்ய மொழி பேசுபவர்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" நடத்துவதாக மாஸ்கோ கூறுகிறது.