புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர்
ரஷ்யாவை சேர்ந்த குறி சொல்லும் பெண் ஒருவர், இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
யார் வெல்வார்கள்
அத்துடன், குடும்பங்களையே நடுங்க வைக்கும் ஒரு பயங்கரமான முன்னறிவிப்பையும் அவர் பதிவு செய்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தொடர்ந்து உக்கிரமானத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
அத்துடன் நேட்டோ உறுப்பு நாடான போலந்திலும் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறியுள்ளது, உக்ரைன் போர் அடுத்த நிலைக்கு நகர்வதாகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பல காரணங்களால் தோல்வியில் முடிந்து வருகிறது.
இந்த நிலையில், Adelina Panina என்ற குறி சொல்பவர், உக்ரைன் போரில் யார் வெல்வார்கள் என்பதையும், அதன் பிறகு ஏற்படவிருக்கும் விவரிக்க முடியாத மனித துயரங்கள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார்.
தவிர்க்க முடியாத வெற்றியை நோக்கி ரஷ்யா நம்பிக்கையுடன் நகர்வதாக குறிப்பிடும் அவர், இந்த முறை ரஷ்யாவை எவரும் ஏமாற்ற முடியாது என்றார். ஏனெனில் அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பொருளாதார சக்தியாக
எதிர்வரும் மாதங்களில், ஒருவித சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும், அதில் நமது நாட்டின் வெற்றி பதிவு செய்யப்படும் என்றார். இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலும், போர் முடிவுக்கு வந்துவிடும், அதன் பிறகு ரஷ்யா ஒரு புதிய உச்சத்திற்கு செல்லும்,
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விஞ்சும் பொருளாதார சக்தியாக உயரும் ஆனால் போரை குறிப்பிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் தொடங்கி, பொதுமக்களுக்கும் நாட்டில் இடமிருக்காது என்றார்.
இக்கட்டான நேரத்தில் ரஷ்யாவை விட்டு வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அவர் பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |