மே 9 அன்று உக்ரைன் மீது போரை அறிவிப்பார் புடின்! அமெரிக்கா தகவல்
எதிர்வரும் மே 9ம் திகதி அன்று உக்ரைன் மீது புடின் முறைப்படி போரை அறிவிப்பார் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதுவரை உக்ரைனில் நடக்கும் மோதலை போர் அல்லது படையெடுப்பு என்று அழைக்க மறுத்துவிட்டார், மாறாக சிறாப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்யா அழைத்து வருகிறது.
ஆனால், ரஷ்யாவின் இந்த வழக்கம் மாறக்கூடும் என அமெரிக்க மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
பழிக்குப் பழி... புதிய ஆணையில் கையெழுத்திட்ட புடின்
ரஷ்யாவில் ‘வெற்றி தினம்’ கொண்டாடப்படும் மே 9-ம் திகதி அன்று உக்ரைன் மீது புடின் அதிகாரப்பூர்வமாக போரை அறிவிப்பார் என மேற்த்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
1945ல் நாசிக்களை நாடு தோற்கடித்ததை ஆண்டுத்தோறும் மே 9-ம் திகதி ரஷ்யா நினைவுகூர்ந்து வருகிறது.
எதிர்வரும் மே 9-ம் திகதி அன்று உக்ரைனில் ராணுவ சாதனை குறித்து அல்லது மோதலை தீவிரப்படுத்துவது குறித்து ரஷ்யா அறிவிக்கலாம் என்று மேற்கத்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.