பழிக்குப் பழி... புதிய ஆணையில் கையெழுத்திட்ட புடின்
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொருளாதார தடைகள் விதிக்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
சில வெளிநாட்டு அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நட்பற்ற செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொருளாதார தடைகள் குறித்த ஆணையில் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
ஆணையின் படி, பொருளாதார தடைகள் விதித்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் ஆணை தடைசெய்கிறது.
உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியா விரைவாகச் செயல்பட்டிருக்கலாம்! ஒப்புக்கொண்ட பிரதமர் போரிஸ்
பிப்ரவரி பிற்பகுதியில் தொடங்கிய உக்ரைன் மீது தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் கார்கிவ் நகரில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.