சிறப்பு படைவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்!
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய சிறப்பு படைவீரர்களுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது சிறப்பு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய நகரங்களை சுதந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள ரஷ்யா ஆதரவாளர்களுக்கு உதவுவதற்காக ரஷ்ய சிறப்பு படைவீரர்களை ஜனாதிபதி விளாடிமிர் புதின் முதன்முதலில் அனுப்பிவைத்தார்.
பின்பு ரஷ்ய படைகள் சிறிது சிறிதாக உக்ரைன் பகுதிகளுக்குள் முன்னேறவே, அதை உக்ரைன் மீதான முழுநீள போராக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Putin hails 'heroism' of Russian special forces in Ukraine pic.twitter.com/5FlbXRpkyC
— Nation Politics (@Nation_Politics) February 27, 2022
அதனை தொடர்ந்து ரஷ்ய ராணுவ வீரர்கள் நான்காவது நாளாக இன்றும் உக்ரைனை தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் தொழில்முறை விடுமுறையை கழித்து வரும் ரஷ்ய சிறப்புப்படை வீரர்களுக்கு தனது சிறப்பு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அங்குள்ள தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் நமது சிறப்பு படைவீரர்கள் உக்ரைனில் திறமையாக சண்டையிட்டு வருவதாகவும், அதே நேரத்தில் ரஷ்யா- உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் உக்ரைனுடன் கிரெம்ளின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் இதற்காக மாஸ்கோவிலிருந்து ஒரு தூதுக்குழு பெலாரஷ்ய நகரமான கோமலுக்கு சென்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.