உக்ரைனுக்கு எதிராக 3,00,000 ரஷ்ய வீரர்கள்: அணு ஆயுதங்களை பயன்படுத்துவேன் புடின் என எச்சரிக்கை
நான் குழப்பவில்லை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவிப்பு.
ரஷ்யாவிடம் அதிநவீன ஆயுதங்கள் உள்ளது மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை.
ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும், அதில் நான் குழம்பவில்லை என்றும் ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் நடத்தி வரும் போர் நடவடிக்கையில் சமீபத்திய வாரங்களாக உக்ரைன் பெருமளவிலான பகுதிகளை மீட்டெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் தாக்குதலுக்கு கூடுதலாக 3,00,000 துருப்புக்களை சேர்க்க ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
Getty Image
இது தொடர்பாக கிரெம்ளின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஆணையில், அணி திரட்டப்படும் படையில் முந்தைய இராணுவ அனுபவம் உள்ளவர்கள் சேர்க்கப்பட இருப்பதாகவும், அவர்கள் சண்டைக்கு அனுப்பப்படுவதற்கு முன் கூடுதல் பயிற்சி பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதன்கிழமை காலை பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், மேற்கத்திய நாடுகள் அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேசுகிறார்கள், நேட்டோ நாடுகளின் சில பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை எழுப்பியுள்ளனர் என்றார்.
Shutterstock
அதைப் போன்று ரஷ்யாவில் பல்வேறு அழிவு ஆயுதங்கள் உள்ளன, மேலும் சில ஆயுதங்களை பொறுத்தவரை அவை நேட்டோவை விட நவீனமானவை என்று எச்சரித்தார்.
அத்துடன் ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும், மக்களின் பாதுகாப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், நிச்சயமாக நமக்குக் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம், மேலும் இது தொடர்பாக நான் குழப்பவில்லை என்றும் ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.
SKY
கூடுதல் செய்திகளுக்கு; இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் உணர்ச்சிகரமான இரவு: இறுதி சடங்குக்கு பிறகான எதிர்காலத் திட்டம் என்ன?
ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzia நான்கு உக்ரேனிய பிராந்தியங்களில் வாக்கெடுப்பு நடத்தவும் ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.