சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியைக் கட்டியணைத்த புடின்: சில சுவாரஸ்ய தகவல்கள்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் சீனா சென்றிருந்த நிலையில், இருவரும் அளவளாவிக்கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகின்றன.
பிரதமர் மோடியைக் கட்டியணைத்த புடின் ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பயணங்களை கவனித்தவர்கள், ஒரு விடயத்தை தெளிவாக கவனித்திருக்கலாம்.
அதாவது, அவ்வளவு எளிதாக யாரும் புடினை நெருங்கமுடியாது. உதாரணமாக, 2019ஆம் ஆண்டு, G20 உச்சி மாநாட்டுக்காக ஜப்பான் சென்றிருந்த புடினுடன், அப்போதைய கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் புடினை தொட்டுப்பேச, உடனடியாக புடினுடைய பாதுகாவலர்கள் ட்ரூடோவை நெருங்கினார்கள்.
உடனே புடின், அமைதியாக யாருக்கும் தெரியாதவகையில், தன் பாதுகாவலர்களை கையமர்த்த, அவர்கள் பின்னோக்கி விலகுவதை வீடியோவில் காணலாம்.
ஆனால், இந்திய பிரதமர் மோடியும் புடினும் சந்தித்துக்கொள்வதைப் பார்த்தால் இரண்டு நண்பர்கள் சந்திப்பதுபோலவே இருக்கும்.
பொதுவாகவே மோடி தன் சக நாட்டுத் தலைவர்களை கட்டியணைத்துக்கொள்வார். அவரையே புடின் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Always a delight to meet President Putin! pic.twitter.com/XtDSyWEmtw
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் சீனா சென்றிருந்த நிலையில், இருவரும் அளவளாவிக்கொள்ளும் காட்சிகளை இந்தியப் பிரதமர் மோடியே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதேபோல, இருவரும் ஒரே காரில் பயணிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
After the proceedings at the SCO Summit venue, President Putin and I travelled together to the venue of our bilateral meeting. Conversations with him are always insightful. pic.twitter.com/oYZVGDLxtc
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
இதுபோக, மாஸ்கோவில் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடியை கோல்ஃப் கார்ட் ஒன்றில் ஏற்றிக்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி புடினே அதை இயக்கிச் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
"आज गाड़ी आपका भाई चलाएगा"#Putin & #Modi Ji ride a golf cart during informal Moscow Oblast meeting.
— BhikuMhatre (@MumbaichaDon) July 9, 2024
Next level camaraderie!
Heartburn not only to US & West, but to RAJMATA & SuSu Swamy also. pic.twitter.com/b06mgfKjqI
ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவரது அலுவலர்களும் இந்தியாவை கரித்துக்கொட்டி வரும் நிலையில், இப்படி மோடியும் புடினும் அளவளாவிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |