ரஷ்ய எண்ணெய் மீது தடை விதித்த அமெரிக்கா... ட்ரம்பிற்கு Tomahawk எச்சரிக்கை விடுத்த புடின்
ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை தீவிரமானது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
வலுவானதல்ல
அமெரிக்காவின் அந்த நகர்வு ரஷ்ய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் வலுவானதல்ல எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது புதன்கிழமை அமெரிக்கா அதிரடி நடவடிக்கை முன்னெடுத்தது.
இதில் Rosneft ரஷ்ய அரசாங்க எண்ணெய் நிறுவனம், மற்றொன்று தனியாருக்கு சொந்தமான Lukoil. இந்த நிறுவனத்திடம் இருந்தே இந்தியாவும் சில ஐரோப்பிய நாடுகளும் மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றனர்.
ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததன் பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி புடின், ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் தீவிரமாக இருப்பது அமெரிக்காவின் இந்த முடிவால் வெளிப்பட்டுள்ளது.
அவை சில விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மை தான், ஆனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை உலுக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்றார்.
மட்டுமின்றி, இந்தத் தடைகள் ரஷ்யா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தாத ஒரு நட்பற்ற செயல் என்றும் அவர் கூறினார். ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சீனா மற்றும் ரஷ்யா மீது நட்பு ரீதியாக நடந்துகொள்ள முயற்சி மேற்கொண்டார்.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் சீனாவும் இந்தியாவும் ஈடுபட்டிருக்க, இந்தியா மீது மட்டும் 25 சதவீத வரி விதித்தார். இதைப்போன்றே ரஷ்யாவுடன் உறவுகளை வளர்க்க முயன்றார்.
எப்போதும் தயாராக
ஆனால் தனது மொத்த செல்வாக்கை பயன்படுத்தியும் புடின் போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுத்து, பல்வேறு காரணங்களை பட்டியலிட்டார். இந்த விவகாரத்தில் உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் அழுத்தம் அளிக்கவே, ரஷ்யாவின் நடவடிக்கையில் கடும் அதிருப்தியடைந்தார்.
மட்டுமின்றி, புடினுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை என விரக்தியடைந்தார். இந்த நிலையில், தாம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும்,
மோதல் அல்லது எந்தவொரு தகராறையும் விட, குறிப்பாக போரை விட பேச்சுவார்த்தைகள் எப்போதும் சிறந்தது என்றும் புடின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் Tomahawk ஏவுகணைகளால் ரஷ்யா தாக்கப்படும் என்றால் பதிலடி வலுவானதாக இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் புடின் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |