விளாடிமிர் புடினின் உடல்நல ரகசியங்கள் அறிந்த சிறப்பு மருத்துவர் திடீர் மாயம்: மகள் கூறிய பின்னணி
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதன்மை மருத்துவரும் ரஷ்ய தடுப்பூசி நிறுவனத்தின் தலைவருமான நபர் திடீரென்று மாயமாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென்று மாயமானதாக தகவல்
ரஷ்யாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனத்தில் பரவலாக ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதன் தலைவர் 59 வயதான Viktor Trukhin என்பவரின் பதவி பறிக்கப்பட்டது.
Credit: east2west
இந்த நிலையில் விக்டர் ட்ருகின் திடீரென்று மாயமானதாக தகவல் வெளியாக, பொலிசார் தீவிர தேடுதல நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். ரஷ்யாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக விக்டர் ட்ருகின் தலைவராக இருந்து வருகிறார்.
சட்டத்தரணியாக பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் தடுப்பூசிகள், சீரம்கள் துறையில் ரஷ்யாவின் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அவருக்கு முழு அறிவும் இருந்துள்ளது.
புடினின் மருத்துவ ரகசியம்
இந்த நிறுவனமே, ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதுடன், ரஷ்ய தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கும் வகித்துள்ளது. மேலும், விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பான அனைத்து தரவுகளும் தற்போது மாயமாகியுள்ள மருத்துவர் விக்டர் ட்ருகின் என்பவருக்கு தெரிந்திருந்தது என்றே கூறப்படுகிறது.
@AFP
தற்போது சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று விக்டர் ட்ருகின் தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர். செப்டம்பர் 3ம் திகதி ட்ருகினின் மகள் மாஸ்கோவில் அவரை சந்தித்துள்ளார், ஆனால் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்படும் ஒருநாள் முன்பு விக்டர் ட்ருகின் மாயமாகியுள்ளார். அத்துடன் தமது சக ஊழியர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார் எனவும், அதில், துரதிர்ஷ்டவசமாக இந்த முடிவு தம்முடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |