புடின் முன்னெடுத்த சந்திப்பு: உக்ரைன் மீது படையெடுக்கும் மேலும் ஒரு நாடு
ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அறியப்படும் Alexander Lukashenko-ஐ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்தித்துள்ள நிலையில், உக்ரைன் மீது பெலாரஸ் படையெடுக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
பெலாரஸ் நாட்டுக்கு சொந்தமான போர் விமானங்கள் உக்ரைன் எல்லையில் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, இந்த அச்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் திட்டத்தின்படியே பெலாரஸ் போர் விமானங்களை அனுப்பி எல்லையில் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆத்திரமூட்டலின் நோக்கம் பெலாரஸின் தற்போதைய தலைமையை உக்ரேனுக்கு எதிரான போருக்கு கட்டாயப்படுத்துவதாகும் என குறிப்பிட்டுள்ள அவர், ஒரு இரத்தக்களரியை ஏற்படுத்தவே ரஷ்யா முயன்று வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, பெலாரஸ் போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடும் வேளை, விளாடிமிர் புடின் அந்த நாட்டு ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டு வந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் தீவிர ஆதரவாளர் இந்த Alexander Lukashenko. 1991ல் சோவித் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே ரஷ்யாவுடன் பெலாரஸ் இணைந்தே செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் தடுமாறி வரும் நிலையில், பெலாரஸ் தரப்பில் உக்ரைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்த ரஷ்யா முயன்று வருவதாகவே கூறப்படுகிறது.