புடின் - நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல்: உறுதிப்படுத்திய ரஷ்யா
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இருவரும் இடையே உயர்மட்ட தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
புடின் - நெதன்யாகு
கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தொலைபேசி வாயிலாக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இரண்டு தலைவர்களும் பிராந்திய ரீதியான முக்கிய பிரச்சினைகள் கலந்து ஆலோசித்து இருப்பதாக ரஷ்யாவின் செய்தி தொடர்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் முக்கிய அம்சமாக ஈரான் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நிலைகளில் அதிகாரப்பூர்வமான உறவை தொடர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ரஷ்யாவின் பிராந்தியத்தை சுற்றி நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கான ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு தயாராக இருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |