மூளையை உருக்கும்... அந்த பகுதியில் ரஷ்யா அணுகுண்டு வீசினால் இது தான் நடக்கும்
அணு ஆயுதம் பயன்பாடு என்பது கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை
உக்ரைன் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விளாடிமிர் புடின், உலக நாடுகளுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடுக்கிறார்
கருங்கடல் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களால் விஷத்தன்மை கொண்ட மேக மூட்டம் உருவாகலாம் எனவும், இது அழுகிய முட்டையின் வாசனையில் இருக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.
கருங்கடலில் ஏற்கனவே ஹைட்ரஜன் சல்பைடு காணப்படுவதால், அப்பகுதியில் அணு ஆயுதம் பயன்பாடு என்பது கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
@getty
கதிரியக்க சுனாமிக்கு நிபுணர்கள் தரப்பு அஞ்சவில்லை எனவும் ஆனால், அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர். ஹைட்ரஜன் சல்பைடு என்பது அழுகிய முட்டை வாசனையை ஏற்படுத்தும், இந்த வாயுவானது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்கிறார்கள்.
அதிகமாக மக்கள் இதை சுவாசிக்க, ஒருகட்டத்தில் மூச்சுவிட முடியாமல் போகும், மூளையை பாதிக்கும் இந்த வாயுவால் உடனடி மரணம் ஏற்படும். இந்த நிலையில், உக்ரைன் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விளாடிமிர் புடின், உலக நாடுகளுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடுக்கிறார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
@getty
தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத பயன்பாட்டை தவிர வேறு வழியில்லை என்றே ரஷ்யா கூறி வருகிறது.
இதனையடுத்தே கருங்கடல் பகுதி அணு ஆயுத பயன்பாட்டால் மிக மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.