விளாடிமிர் புடின் படுகொலை முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா: ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படுகொலை முயற்சியின் பின்னணியில், அமெரிக்கா இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மாளிகை தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்து ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் இருதரப்பினருக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
@east to west
இந்நிலையில் இரண்டு டிரோன்கள் மூலமாக ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகையில் தாக்குதல் நடத்தி, புடினை கொல்ல முயன்றதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இரண்டு ஆளில்லா விமானங்கள் ரஷ்யா ஜனாதிபதி மாளிகை அருகே பறந்து வந்த போது, அவை ரஷ்ய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
@east to west
இச்சம்பவத்திற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, மேலும் ரஷ்யா இதனை பயங்கரவாத தாக்குதல் என குற்றம் சாட்டியுள்ளது.
பின்னணியில் அமெரிக்கா
இது பற்றி பேசிய ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் ’இந்த தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை உக்ரைன் முடிவெடுக்கவில்லை, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது’ என மாஸ்கோ டைம்ஸில் தெரிவித்துள்ளார்.
@ap
’எங்களுக்கு தெரியும் கண்டிப்பாக இந்த முடிவை உக்ரைன் எடுத்திருக்காது, அமெரிக்கா தான் இதற்கு மூல காரணம்” என பெஸ்கோவ் கூறியுள்ளார்.
’இது போன்ற அபாயகரமான தாக்குதலில் நேரடியாக அமெரிக்கா தலையிடுவது ஆபத்தில் தான் போய் முடியும். அமெரிக்காவின் வாஷிங்டன் இதனை புரிந்து கொள்ளுமென நினைக்கிறேன்.’ என திமித்ரி பெஸ்கோவ் மூலம் ரஷ்யா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.