உக்ரைன் மீதான படையெடுப்புக்கு கடும் எதிர்ப்பு... ரஷ்ய தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்
ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவருமான Ravil Maganov பரிதாபமாக பலியாகியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிக்க மறுத்த சில நிறுவனங்களில் Lukoil நிறுவனமும் ஒன்று
ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவரும் முக்கிய தொழிலதிபரும், ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவருமான Ravil Maganov பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 6வது மாடி ஜன்னல் வழியாக Ravil Maganov தவறி விழுந்து இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@East2West
இருதயம் தொடர்பான பிரச்சனைகளால் 67 வயதான Ravil Maganov அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் மத்திய சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ரஷ்யாவின் முக்கிய தலைவர்கள் மற்றும் மேட்டுகுடி மக்கள் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் இந்த மருத்துவமனையிலேயே சோவியத் ரஷ்யாவின் கடைசி ஜனாதிபதியான மிகைல் கோர்பச்சேவ் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மட்டுமின்றி, ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான Ravil Maganov உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக எதிர்த்ததாகவும், அவரது Lukoil நிறுவனம் உக்ரைன் தொடர்பில் விளாடிமிர் புடினின் முடிவை ஆதரிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
Ravil Maganov இறப்பை உறுதி செய்துள்ள Lukoil நிறுவனம், ஜன்னலில் இருந்து விழுந்து இறந்துள்ளதை குறிப்பிடாமல், உடல் நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரின் திடீர் இறப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிக்க மறுத்த குறிப்பிட்ட சில நிறுவனங்களில் Lukoil நிறுவனமும் ஒன்று. மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் Lukoil நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
@East2West