புடினின் முன்னணி பிரச்சாரகர் மர்மமான முறையில் மரணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னணி பிரச்சாரகரான கிரில் வைஷின்ஸ்கி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கிரில் வைஷின்ஸ்கி
தி ரஷ்யா டுடே மாநில ஊடகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் கிரில் வைஷின்ஸ்கி (Kirill Vyshinsky).
58 வயதான இவர், 2018ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரேனிய குடிமகனாக கிரில் இருந்தபோது, ரஷ்ய பிரச்சாரத்திற்காக பணியாற்றியதற்காக தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கீவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 2019ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் மாஸ்கோவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, ஒரு தடுப்பு மையத்தில் சுமார் ஒரு வருடத்தை கிரில் கழித்திருக்கிறார்.
மாஸ்கோவில் மரணம்
இந்த நிலையில், கிரில் வைஷின்ஸ்கி நீண்ட அல்லது கடுமையான நோயால் மாஸ்கோவில் இறந்துவிட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அவர் இந்த கோடை காலத்தில் வழக்கமான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதே நேரத்தில் தி ரஷ்யன் டுடே (RT) பிரச்சார ஊடகத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.
மேலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக முன்னர் எந்த அறிக்கையும் இல்லை என்று கூறப்படுவதால், அவரது மரணம் சந்தேகத்தைத் தூண்டியுள்ளது.
கிரில் வைஷின்ஸ்கி 2014ஆம் ஆண்டு முதல் புடினின் பிரச்சார நிறுவனமான RIA நோவோஸ்டி செய்தி நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |