ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... வெனிசுலாவிற்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய புடின்
ட்ரம்பின் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்பு கொண்டு வெனிசுலாவிற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெனிசுலா மக்களுக்கு
வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்கா அதிரடியாகக் கைப்பற்றிய நிலையில் ரஷ்யாவில் இருந்து வெனிசுலாவிற்கு ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மதுரோ மாஸ்கோவிற்கு விஜயம் செய்ததன் மூலம், ரஷ்யா வெனிசுலாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளது.
ரஷ்யாவில் மதுரோ வருடாந்திர இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டு புடினுடன் ஒரு விரிவான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
வியாழக்கிழமை தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்ட விளாடிமிர் புடின் வெனிசுலா மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார். மேலும், வளர்ந்து வரும் அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் தேசிய நலன்களையும் இறையாண்மையையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மதுரோ அரசாங்கத்தின் கொள்கைக்கு புடின் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
எண்ணெய் இருப்பு
புதன்கிழமை, அமெரிக்க இராணுவம் வெனிசுலாவின் எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றியது. வெனிசுலாவின் இடதுசாரித் தலைவர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதைப்பொருள் குழுவை வழிநடத்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.
ஆனால் அவர் அதை மறுத்து வருகிறார். மட்டுமின்றி, வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு காரணமாகவே அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை நாடுகிறது என்றும் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, வெனிசுலாவின் தாக்கக்கூடிய தூரத்திற்குள் போர்க்கப்பல்களை நிறுத்தி, அச்சுறுத்தல் விடுத்து வருகிறார் டொனால்ட் ட்ரம்ப் . மிக விரைவில் தாக்குதல் தொடர்பான முடிவெடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |