அமெரிக்காவின் புதிய சமாதான திட்டம்: பச்சை கொடி காட்டிய புடின்
அமெரிக்காவின் புதிய சமாதான திட்டம் உக்ரைன் உடனான மோதலுக்கு தீர்வாக அமையலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய சமாதான திட்டம்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அமெரிக்கா 28 அம்சங்கள் உள்ளடக்கிய புதிய சமாதான திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த புதிய சமாதான திட்டத்தில் உள்ள அம்சங்களை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தற்போது ஆராய்ந்து ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ உரையில், வரவிருக்கும் வாரம் உக்ரைனுக்கு மிகவும் கடினமானதாக இருக்கலாம். அத்துடன் முக்கியமான கூட்டாளியை இழக்கப்போகிறோமா அல்லது தனது தேசிய கண்ணியத்தை விட்டுக் கொடுக்கப்போகிறோமா என்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ள உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
புடின் திட்டவட்டம்
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்சங்கள் கொண்ட புதிய சமாதான திட்டம், உக்ரைனுடனான இறுதியான அமைதி தீர்வுக்கு ஒரு அடித்தளத்தை வழங்க கூடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புடின், உக்ரைன் உடனான மோதல் குறித்து பேசினார்.
அப்போது, அமெரிக்காவின் 28 அம்சங்கள் அடங்கிய சமாதான திட்டத்தை பெற்று இருப்பதாக புடின் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவை உக்ரைனுடனான மோதலுக்கு தீர்வாக அமையலாம் என்று கூறினாலும், இது குறித்து ரஷ்யாவுடன் தற்போது வரை விவாதிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை கவுன்சிலில் புடின் வெளிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |