70-வது பிறந்தநாளில் புட்டினுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு! கொடுத்தது யார் தெரியுமா?
வெள்ளியன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிர்பாராத பரிசு கிடைத்தது.
சோவியத் காலத்திலிருந்தே டிராக்டர்கள் பெலாரஸ்ய தொழில்துறையின் பெருமையாக கருதப்படுகிறது.
அக்டோபர் 07, வெள்ளிக்கிழமையன்று தனது 70-வது பிறந்தநாள் பரிசாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு டிராக்டரை பரிசாக பெற்றார்.
பல முன்னாள் சோவியத் நாடுகளின் தலைவர்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜாரிஸ்ட் கால கான்ஸ்டான்டின் அரண்மனையில் சந்தித்தபோது, பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) புடினுக்கு வாகனத்திற்கான (Tractor) பரிசுச் சான்றிதழை வழங்கினார்.
சோவியத் காலத்திலிருந்தே டிராக்டர்கள் பெலாரஸ்ய தொழில்துறையின் பெருமையாக கருதப்படுகிறது.
முன்னாள் சோவியத் தேசத்தை இரும்புக் கரம் கொண்டு சுமார் மூன்று தசாப்தங்களாக ஆட்சி செய்த எதேச்சதிகாரத் தலைவரான லுகாஷென்கோ, புடினுக்குப் பரிசளித்த மாதிரியை தனது தோட்டத்தில் பயன்படுத்தியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
லுகாஷென்கோவின் அலுவலகம் வெளிப்படுத்திய பரிசுக்கு ரஷ்யத் தலைவர் புடின் எவ்வாறு பதிலளித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முன்னாள் சோவியத் நாடுகளுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசிய விளாடிமிர் புடின், கூட்டத்தின் போது அந்த பரிசு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
பயங்கரவாதம், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பிற குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு தகவல் பரிமாற்றத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் சோவியத் நாடுகளின் தளர்வான கூட்டணியான காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
— Will Vernon (@BBCWillVernon) October 7, 2022