அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விளாடிமிர் புடின்: அபாய எச்சரிக்கை செய்த உக்ரைன்
உக்ரைன் அணுமின் நிலையங்களில் உள்ள இரண்டு துணை மின்நிலையங்களை ரஷ்யா தாக்கிய நிலையில், அணுசக்தி அச்சுறுத்தலை விளாடிமிர் புடின் உருவாக்குவதாக உக்ரைன் எச்சரித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும்
விளாடிமிர் புடினின் இந்த துணீகரத் தாக்குதல் ஐரோப்பா முழுவதும் அணு ஆயுதப் பேரழிவை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, பெல்ஜியத்தில் உள்ள ஒரு அணு மின் நிலையத்தின் மீது மர்ம ட்ரோன்கள் பறந்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

க்மெல்னிட்ஸ்கி மற்றும் ரிவ்னே அணு மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட துணை மின்நிலையங்கள் மீது ரஷ்யாவின் துணிச்சலான தாக்குதல்கள் ஐரோப்பாவில் அணுசக்தி பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக உக்ரைன் சாடியுள்ளது.
இதனையடுத்து, சர்வதேச அணுசக்தி முகமை ஆளுநர்களுடன் அவசரக் கூட்டத்திற்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. இது தற்செயலான தாக்குதல்கள் அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்டவை என்றே உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியா
மேலும், அணுசக்தி பாதுகாப்பை மதிக்கும் அனைத்து நாடுகளும், குறிப்பாக சீனா மற்றும் இந்தியா, பேரழிவை விளைவிக்கும் அணுசக்தி மீதான பொறுப்பற்ற தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தக் கோருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் தாக்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, அணுமின் நிலையம் ஒரு மாதத்திற்கு டீசல் ஜெனரேட்டர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, டோயல் அணுமின் நிலையத்தின் மீது குறைந்தது மூன்று ட்ரோன்கள் பறந்து செல்வதை பெல்ஜிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |