உக்ரைனுக்கு புதிய பிரச்சினை: பொக்கிஷங்களை குறிவைக்கும் புடினின் சிறப்பு கும்பல்!
உக்ரைனுக்கு ஒரு புதிய பிரச்சினையாக, சிறப்பு கும்பல் ஒன்று உக்ரைனில் உள்ள பொக்கிஷங்களை ரஷ்யாவிற்கு திருடி எடுத்துச் செல்வதற்காகவே ஜனாதிபதி புடினால் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டுகளைக் கண்காணிக்கும் சர்வதேச கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றுப்படி, ஒரு சிறப்புக் கும்பல் மதிப்புமிக்க வரலாற்றுப் பொருட்களை உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்குள் கடத்துகிறது என்று கூறியுள்ளனர்.
"குறிப்பிட்ட ஓவியங்கள் மற்றும் ஆபரணங்களை குறிவைத்து ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட ரஷ்ய நடவடிக்கைக்கு மிகவும் வலுவான ஆதாரம் இப்போது உள்ளது" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் டிஜிட்டல் இமேஜிங் நிபுணர்களுடன் பணிபுரியும் மானுடவியலாளரான பிரையன் டேனியல்ஸ் (Brian Daniels) கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி' புத்தகம் எழுதிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
Image: Print Collector/Getty Images
அமெரிக்க மாநிலமான வர்ஜீனியாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து, டேனியல்ஸ் மற்றும் அவரது சகாக்கள் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கலாச்சார இலக்குகளின் சிதைவு மற்றும் அழிவைக் கண்காணித்து, குற்றங்களின் வடிவங்களைக் கண்டறிந்துள்ளனர்.
திருடர்கள் குழு விலைமதிப்பற்ற சித்திய தங்கத்தின் (Scythian gold) மீது அதிக கவனம் செலுத்துகிறது. இவை அதிக மதிப்புள்ள பண்டைய ஃபிலிகிரீ (filigree) படைப்புகளாகும், பெரும்பாலும் விலங்குகளை சித்தரிக்கும். அவை மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பழங்குடியினரால் ஒரு காலத்தில் சித்தியா (Scythia) என்று அழைக்கப்பட்டன.
இதையும் படிங்க: ஐரோப்பாவையே அழித்துவிடுவோம்... ரஷ்யா விடுத்துள்ள புதிய மிரட்டலின் பின்னணி
Photograph: Efrem Lukatsky/AP
பிரமிக்க வைக்கும் இந்த கலைப்பொருட்கள், திருடப்பட்டு வ்ருகிறது, இது ஒரு உத்தி என்பது தெளிவாகிறது என்றும், இந்த நிலையில், உக்ரேனியர்கள் திருடப்பட்ட பொருட்களை பட்டியலிட உள்ளனர் என்றும் டேனியல்ஸ் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய நகரங்களில் மறைக்கப்பட்ட கலைப்பொருட்களைக் கண்டுபிடித்து திருடுவதற்கான ரஷ்ய முயற்சிகள் மிகவும் உறுதியானதாகி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
Image: De Agostini via Getty Images