இந்தியாவில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை - இந்தியர்களை புகழ்ந்த புடின்
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே ஹிந்தி பேசுகிறார்கள் என புடின் தெரிவித்துள்ளார்.
புடின் இந்திய பயணம்
இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார்.

இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உறவுகள், வர்த்தக விரிவாக்கம், ரஷ்யா உக்ரைன் போர் குறித்த விவாதங்கள் இடம்பெற்றது.
இந்நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமை மற்றும் கலாச்சாரம் குறித்து புடின் பாராட்டி பேசியுள்ளார்.
மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே ஹிந்தி பேசுவார்கள்
சமீபத்திய இந்திய பயணம் குறித்து பேசிய புடின், "சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அங்கு சுமார் 1.5 பில்லியன் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே ஹிந்தி பேசுகிறார்கள்.

500 முதல் 600 மில்லியன் மக்கள் மட்டுமே ஹிந்தி பேசுவார்கள். மற்ற அனைவரும் வேறு மொழி பேசுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் பேசுவது ஒருவருக்கு ஒருவர் புரியாது.
❗️ President Putin: For Massive Countries Like Russia & India, it is Important to Maintain Unity in Diversity pic.twitter.com/151n5Lh1JI
— RT_India (@RT_India_news) December 9, 2025
இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய நாடுகள், இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை அல்லது பன்முகத்தன்மையில் ஒற்றுமை பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |