போரை முடிவுக்கு கொண்டு வர மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளது - புடின்
putin says modi have good ideas to end war: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வால்தாய் கிளப் கருத்தரங்கில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்து கொண்டார்.
இதில் பேசிய அவர், "பிரதமர் மோடியுடன் ரஷியாவுக்கு நல்ல நட்புறவு உள்ளது. இருப்பினும், உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வரும் உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதலைத் தீர்ப்பதற்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கும் பிரதமர் மோடியிடம் மிகச் சிறந்த யோசனைகள் உள்ளன.
இயல்பாகவே, பிரதமர் மோடி இந்த மோதலுக்கு ஒரு முடிவு கட்டுவதில் அக்கறை கொண்டிருந்தாலும், ஒரு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கிறார். இதை நேரடியாகச் சொல்வது எனது கடமை என்று நான் நினைக்கிறேன்.
மேலும், பிரதமர் மோடியின் யோசனைகளுக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தந்த புடினிடம், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
செப்டம்பர் 11 அன்று நடந்த கூட்டத்தின்போது, மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே ஒரே வழி என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.