உக்ரைன் அந்த அமைப்புடன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புடின் விளக்கம்
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை
உலகமே தனது பார்வையை ட்ரம்ப் பக்கமிருந்து திருப்பி ரஷ்யா, சீனா பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் சீனா சென்ற விடயம் அதிக அளவில் கவனம் ஈர்த்துள்ளது எனலாம்.
இந்நிலையில், ஊடகவியலாளர்களை சந்தித்த புடின், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவது என்பது வித்தியாசமான விடயம் என்றும், அதை ரஷ்யாவால் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார் புடின்.
அத்துடன், ரஷ்யா ஐரோப்பா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுவருவதாக கூறப்படும் விடயத்தையும் நிராகரித்துள்ளார் புடின்.
புடின், சீனா, இந்தியா, ஸ்லோவாகியா போன்ற நாடுகளின் தலைவர்களை சந்தித்துவரும் நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்திப்பதற்காக, போலந்து நாட்டு ஜனாதிபதியான Karol Nawrocki இன்று வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கிறார்.
ஆக, ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஒரு பக்கமும், அமெரிக்காவுடன் சில நாடுகளும் அணி திரள்வது போல் தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |