உக்ரைனில் அமைதிக்கு வழி: நான் கவனிக்கிறேன் - புடின்
அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்தைகள் உக்ரைனில் அமைதிக்கான பாதையைத் திறக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
விளாடிமிர் புடின்
சீனாவின் தியான்ஜினில் நடந்த SCO உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட விளாடிமிர் புடின் (Vladimir Putin), உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேசினார்.
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து கடந்த மாதம் அலாஸ்காவில் டொனால்டு ட்ரம்பை சந்தித்து பேசினார் புடின்.
அதனைக் குறிப்பிட்டு மாநாட்டில் பேசிய அவர், "உக்ரைனில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க உதவும் நோக்கில் சீனா, இந்தியா மற்றும் எங்கள் பிற மூலோபாய பங்காளிகளின் முயற்சிகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.
சமீபத்தில் அலாஸ்காவில் நடந்த ரஷ்ய-அமெரிக்க உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட புரிதல்கள் அதே திசையில் நகர்கின்றன. உக்ரைனில் அமைதியை நோக்கிய பாதையைத் திறக்கின்றன என்பதையும் நான் கவனிக்கிறேன்" என தெரிவித்தார்.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கு
மேலும் அவர் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தங்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், அந்த புரிந்துகொள்ளுதல்களை செயல்படுத்த ஏற்கனவே பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
உக்ரைனுக்கு எதிரான சண்டை குறித்து புடின் பேசும்போது, நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் முயற்சிகள் மற்றும் திட்டங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |