இது தொடரும்! திட்டவட்டமாக மேற்கத்திய நாடுகளுக்கு செய்தி அனுப்பிய புடின்
ரஷ்யா தொடர்ந்து இராணுவத்தையும் கடற்படையையும் பலப்படுத்தி நவீனமயமாக்கும் என புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புடின் வெளியிட்ட வீடியோவில், உக்ரைன் பிரச்சனைியல் தனது நிலைப்பாடு பற்றி மேற்கத்திய நாடுகளுக்கு செய்தி அனுப்பும் தோற்றத்தில் பேசியுள்ளார்.
அதில், நேரடி மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை ரஷ்யா எப்போதும் திறந்தே வைத்திருக்கும் மற்றும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு தூதரக முயற்சியில் தீர்வுகளைத் தேட தயாராக உள்ளது.
ஆனால், ரஷ்யாவின் நலன்களும் மக்களின் பாதுகாப்பும் நிபந்தனையற்றது என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.
எனவே, நாங்கள் தொடர்ந்து இராணுவத்தையும் கடற்படையையும் பலப்படுத்தி நவீனமயமாக்குவோம்.
அனைத்து நாடுகளையும் நம்பத்தகுந்த வகையில் பாதுகாக்கும் சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்க ரஷ்யாவின் விடுத்த வேண்டுகோளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை என புடின் கூறினார்.