அணு ஆயுதப் போருக்கு தயார்., மேற்கு உலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
மேற்குலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக உக்ரைன் மீதான அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்
அமெரிக்கா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பினால், போர் மேலும் சிக்கலாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழ்நிலை இல்லை, ஆனால் ராணுவக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். ரோஷியா சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
[3OM3FEPutin warns the West: Russia is ready for nuclear war ]
அமெரிக்கா அணுகுண்டு சோதனை நடத்தினால், அந்த சோதனையை நாங்களும் நடத்தவும் தயாராக உள்ளோம் என்று ரஷ்ய அதிபர் கூறினார்.
இதுவரை உக்ரைனில் நடந்த போரில் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று புடின் தெளிவுபடுத்தினார்.
அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு சில கோட்பாடுகள் உள்ளன என்று அவர் கூறினார்.
ரஷ்யாவின் இறையாண்மைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று அவர் கூறினார். தங்களின் உத்திகளில் எல்லாம் இருப்பதாகவும், எதையும் மாற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Putin warns the West nations, Russia is ready for nuclear war, Vladimir Putin, Ukraine, Russia Ukraine War