உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக போரை கட்டவழித்து விடுகின்றன: விளாடிமிர் புடின் குற்றச்சாட்டு
உலக நாடுகள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக போரை கட்டவழித்து விடுகின்றன, என விளாடிமிர் புடின்(Vladimir Putin) இரண்டாம் உலக போர் கொண்டாட்ட விழாவில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உக்ரைன் ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகையில் தாக்குதல் நடத்தி ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்ல முயற்சி செய்தது.
@afp
ரஷ்யா ராணுவமும் தொடர்ந்து உக்ரைன் நகரங்களின் மீது பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடுக்கப்பட்ட தாக்குதலில் உக்ரைன் நகரின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்ததோடு பலரும் உயிரிழந்தனர்.
@ap
இந்த நிலையில் போர் நடைபெறுவதால், பாதுகாப்பு காரணமாக இரண்டாம் உலக போரின் வெற்றி கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள்
இதனை தொடர்ந்து ஜெர்மன் படையை இரண்டாம் உலக போரில் வீழ்த்திய நாளை கொண்டாடும் வகையில், ராணுவ அணிவகுப்பு ரஷ்யாவில் இன்று நடத்தப்பட்டது.
@ap
இந்த நிகழ்வில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உலகம் இப்போது பெரும் திருப்பு முனையில் உள்ளது, உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு எதிராக போரை திருப்பி விட்டுள்ளன” என அணி வகுப்புக்கு பின்பான உரையில் பேசியுள்ளார்.
மேலும் அவர் ”நமது ராணுவ வீரர்களின் வெற்றியை தொடர்ந்து கொண்டாடுவோம்” என கூறியதும் ரஷ்ய மக்கள் கரகோஷம் எழுப்பியுள்ளனர்.
@ap
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான போரில், அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு, பல்வேறு ராணுவ உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.