புடினுக்கு எந்த நோயும் இல்லை...ரஷ்ய அமைச்சர் தகவல்!
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வதந்திகளுக்கு மத்தியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலை குறித்த வதந்திகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்த வந்த நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து இந்த வதங்கிகள் அதிகமாக பரப்பபட்டு வருகிறது.
அதிலும் சிலவற்றில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மனநிலை மனநல கோளாறு, அல்சைமர் மற்றும் இரத்த புற்றுநோய் என ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவி வருகின்றன, இருப்பினும் இந்த தகவல்களில் புடினுக்கு எத்தகைய இரத்த புற்றுநோய் வகை என குறிப்பிடப்படவில்லை.
இந்தநிலையில், பிரெஞ்சு ஒளிபரப்பு TF1 க்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அளித்த பேட்டியில், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உங்கள் எல்லாருக்கும் தெரியும் ஜனாதிபதி புடின் ஒவ்வொரு நாளும் பொதுவெளியில் தோன்றுகிறார், அவரை தினமும் தொலைக்காட்சி திரைகளில் பார்க்கலாம், அவரது உரைகளைக் கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு ஏவுகணை வழங்க மாட்டோம்: ரஷ்ய எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!
எந்தவொரு மனநோய் அல்லது அதன் நோய் அறிகுறிகளையும் ரஷ்ய ஜனாதிபதியிடம் காணமுடியும் என்று நான் நம்பவில்லை, மேலும் இதுப்போன்ற வதங்திகளை பரப்புபவர்களின் மனசாட்சிக்கு இதனை விட்டுவிடுகிறேன் என செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.