காதலியின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ள புடின்
ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின், தனது காதலியின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
காதலியின் பாதுகாப்புக்காக...
புடினுடைய ரகசிய காதலி என ஊடகங்களால் அழைக்கப்படுபவர் தடகள வீராங்கனையான அலீனா (Alina Kabaeva).

Valdai என்னுமிடத்தில் தன் காதலியுடன் தங்க புடின் பயன்படுத்தும் மாளிகையைச் சுற்றி, Pantsir anti-aircraft systems என்னும் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளாராம் புடின்.
ஒரு பாதுகாப்பு அமைப்பின் விலை 16 மில்லியன் பவுண்டுகள். அந்த மாளிகையைச் சுற்றி அத்தகைய 27 பாதுகாப்பு அமைப்புகளை அமைத்துள்ளாராம் புடின்.
ஆக, அந்த பாதுகாப்பு அமைப்புக்கான செலவு 430 மில்லியன் பவுண்டுகள். அதாவது, இலங்கை மதிப்பில் சுமார் பதின்மூன்றாயிரம் கோடி ரூபாய்.

விடயம் என்னவென்றால், 20 மில்லியன் மக்கள் வாழும் மொத்த மாஸ்கோவிலேயே இந்த பாதுகாப்பு அமைப்புகள் 60தான் உள்ளனவாம்.
இந்த பாதுகாப்பு அமைப்புகள், தாழ்வாகப் பறக்கும் ட்ரோன் போன்ற விடயங்களை தாக்கி அழித்துவிடும்.
உக்ரைன் தனது நீண்ட தூரம் தாக்கும் ட்ரோன்களை பயன்படுத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, அச்சம் காரணமாக புடின் இந்த பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |