உக்ரைனில் உங்கள் வீரர்களின் தியாகங்களை மறக்கமாட்டோம்: கிம்மிற்கு நன்றி கூறிய புடின்
உக்ரைனுக்கு எதிராக சண்டையிட துருப்புகளை அனுப்பியதற்கு கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நன்றி தெரிவித்தார்.
இராணுவ துருப்பு உதவி
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடந்த இராணுவ அணிவகுப்பைத் தொடர்ந்து, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவரும் சந்தித்து பேசினர்.
அப்போது உக்ரைன் மீதான படையெடுப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிற்கு உதவ இராணுவ துருப்புகளை அனுப்பியதற்காக விளாடிமிர் புடின் (Vladimir Putin) நன்றி தெரிவித்தார்.
அவர், "உங்கள் முன்முயற்சியின் பேரில், குர்ஸ்க் பிராந்தியத்தின் விடுதலையில் உங்கள் சிறப்புப் படைகள் பங்கேற்றன என்பது அனைவரும் அறிந்ததுதான். நமது புதிய ஒப்பந்தத்தின்படி இது முழுமையாக இருந்தது.
உங்கள் வீரர்கள் தைரியமாகவும், வீரமாகவும் போராடினர் என்பதை நான் கவனிக்க விரும்புகிறேன்.
உங்கள் ஆயுதப்படைகள் மற்றும் உங்கள் படைவீரர்களின் குடும்பத்தினர் செய்த தியாகங்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |