மேற்கு நாடுகள் மீது அணுகுண்டுவீச்சு? மிரட்டல் விடுத்த புடின்
ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தயாராக உள்ளதாக கூறி, மேற்குலகில் அணுகுண்டு வீசுவோம் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் State of the Nation உரையின்போது அணுகுண்டு குறித்த விடங்களை வெளிப்படையாக கூறினார்.
அவர் தனது உரையில், 'அவர்கள், நேட்டோ, அமெரிக்காவும் உலகின் பிற பகுதிகளில் செயல்பாட்டுடன் உள்ளனர். நிச்சயமாக அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். சிறந்த சக்திகளையும், அதிக விளைவுகளையும் ஏற்படுத்தும் படைகளைக் கொண்டு எங்கள் பிரதேசங்களை தாக்குவதற்கு தயாராகி வருகின்றனர்.
ஆனால், எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களின் தலைவிதியை நாங்கள் நினைவில் கொள்கிறோம். நிச்சயமாக அவர்களின் தலைவிதி நாம் எதிர்கொள்ளக்கூடிய எதையும் விட மிகவும் மோசமாக இருக்கும்.
எங்களிடமும் ஆயுதங்கள் உள்ளன என்பதையும், அவர்களை சொந்த பிரதேசத்திலேயே, அவர்களைத் தோற்கடிக்கக்கூடிய ஆயுதங்களும் இருக்கின்றன என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிச்சயமாக இவை அனைத்தும் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், இது உண்மையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தூண்டும் என்பது அவர்களுக்கு புரியவில்லையா?' என கூறினார்.
அத்தடன் உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்ப மேற்கு நாடுகள் முடிவுகள் செய்தால் துன்பகரமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |