ஆர்க்டிக் போர் உறுதி... ட்ரம்பின் கனவுத் திட்டத்திற்கு எதிர்பாராத மிரட்டல் விடுத்த விளாடிமிர் புடின்
கிரீன்லாந்தை கைப்பற்றும் முடிவில் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக இருப்பார் என்றால் ஆர்க்டிக் பகுதியில் போர் வெடிக்கும் என்பது உறுதியென ரஷ்ய ஜனாதிபதி புடின் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யா கண்காணித்து வருவதாக
இந்த விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை ரஷ்யா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நகரமான மர்மன்ஸ்கில் நடந்த சர்வதேச ஆர்க்டிக் மன்றத்தில் உரையாற்றிய விளாடிமிர் புடின்,
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்க தரப்பில் முன்னெடுக்கப்படும் தீவிரமான திட்டங்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என குறிப்பிட்டுள்ள புடின், அவை நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டவை என்றார்.
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்பின் முடிவு தீவிரமானது என்பதை புடின் குறிப்பிட்டுள்ளது, இந்த விவகாரத்தில் ரஷ்யா தனிக்கவனம் செலுத்தி வருவதையே சுட்டிக்காட்டுவதாக கூறுகின்றனர்.
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா எவரையும் ஒருபோதும் அச்சுறுத்தியதில்லை என்று குறிப்பிட்ட புடின், ஆனால் அதன் நலன்களைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும், அப்பகுதியில் அதிக இராணுவ வீரர்களை நிறுத்தும் திட்டமிருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு இடையகமாக, வடக்கு அட்லாண்டிக்கில் கிரீன்லாந்து ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும். கிரீன்லாந்து விவகாரத்தில் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
மிகப்பெரிய தவறாகும்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் அவரது மனைவி உஷாவும் வெள்ளிக்கிழமை கிரீன்லாந்தின் வடக்கு விளிம்பில் உள்ள பிட்டுஃபிக் விண்வெளி தளத்தைப் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியான நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதியின் கருத்து வெளியாகியுள்ளது.
மேலும், கிரீன்லாந்தை கைப்பற்றுவது என்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் வெறும் விசித்திரமான பேச்சு அல்ல என்று புடின் குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் வாய்ச்சவடால் என்று நம்புவது மிகப்பெரிய தவறாகும் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எந்த நாட்டுடனும் இல்லாத அளவுக்கு மிக நீளமான ஆர்க்டிக் கடற்கரை அமைந்துள்ளது, மேலும் இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் ரஷ்யாவுக்கு அதை மிகவும் முக்கியமானதாக மாற்றுகின்றன.
இதற்கிடையில், தீவைக் கைப்பற்றும் தனது முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து உறுதி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |