பிரித்தானியாவை மூன்றே நிமிடத்தில் தாக்கும் அணுஆயுத ஏவுகணை: புடினின் பகிரங்க எச்சரிக்கை!
பிரித்தானியாவை மூன்றே நிமிடங்களில் தாக்கும் சாத்தான் 2 ஏவுகணை, இந்த ஆண்டின் இறுதிக்குள் போர் முனையில் பயன்படுத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 119 நாள்களாக தொடரும் நிலையில், உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் இதுவரை நிறைவடைவதாக தெரியவில்லை.
இந்தநிலையில், கிரெம்ளினில் செவ்வாய்கிழமை இராணுவ அகாடமி பட்டதாரிகளின் முன்னிலையில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்த ஆண்டின் இறுதிக்குள் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையின் முதல் தொகுப்பு தனது கடமையை செய்யும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராணுவ பட்டத்தாரிகளின் சந்திப்பில் தொடர்ந்து பேசிய புடின், ரஷ்ய ராணுவத்தின் பலம் மேம்படுத்தப்படும் என்றும், உக்ரைன் போரில் ஹீரோக்கள் போல போராட்டியதற்கு ராணுவ வீரரை பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சர்மட் ஏவுகணை அல்லது சாத்தான் 2 ஏவுகணைகள் உலகின் நீண்டத் தூரம் பறந்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்ககூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள், (ballistic missile) இவை சுமார் 11,200 மைல்கள் அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கும் என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மிக எளிதாக தாக்ககூடியது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரசவத்தின் போது துண்டிக்கப்பட்ட குழந்தையின் உடல்: தாயின் கருப்பைக்குள்ளே தலை வைத்து தைத்த மருத்துவ
ராணுவ வல்லுநர்களின் கணிப்புப்படி சாத்தான் 2 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் 10 அணுஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்டதால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை ஒற்றை தாக்குதலில் முழுவதுமாக அழிக்கும் திறன் கொண்டது எனக் கருத்தப்படுகிறது.