ரஷ்யாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் சுரங்கப்பாதை: புடின் திட்டம்
அமெரிக்கா உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை குஷிப்படுத்த புடின் முயற்சி மேற்கொண்டுவருவதாக கருதப்படுகிறது.
புடின் முன்வைத்துள்ள திட்டம்
அவ்வகையில், ரஷ்யாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்றை அமைக்கும் திட்டத்தை புடின் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 பில்லியன் டொலர்கள் செலவில் கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுமார் 70 மைல் நீளமுள்ள அந்த சுரங்கப்பாதைக்கு, புடின் - ட்ரம்ப் சுரங்கப்பாதை என பெயரிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சுரங்கப்பாதையை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணிக்காக, உலக கோடீஸ்வரரான எலான் மஸ்கின், The Boring Company என்னும் நிறுவனத்தின் உதவியை நாடலாம் என்றும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அப்படி ஒரு சுரங்கப்பாதை உண்மையாகவே அமைக்கப்படும் நிலையில், அதற்கு எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.
அப்போது புடினுக்கு 81 வயதும், ட்ரம்புக்கு 87 வயதும் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |