வட கொரிய வீரர்களை உக்ரைனில் கண்ணிவெடிகளுக்கு பலி கொடுக்கும் புடின்
உக்ரைன் போரில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வட கொரிய வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பயன்படுத்துவதாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உயிரைப் பணயம் வைத்தும்
கிம் ஜோங்-உன்னின் வீரர்கள் ரஷ்யாவிற்காக ஆபத்தான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும், இதனால் அவர்கள் உடல் சிதறி பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

போர்க்களத்திலும் வட கொரிய வீரர்கள் கிம் ஜோங் தொடர்பான தேசபக்தி பாடல்களைப் பாடுகிறார்கள், அரசியல் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள் மற்றும் தங்கள் சொந்த நாட்டின் உணவையே சாப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு கொரிய இராணுவ வீரரும் தங்கள் உயர் தளபதியான கிம் ஜோங் உன்னுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள் என்றும், தங்கள் உயிரைப் பணயம் வைத்தும் கூட அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள் என்றும் போர்க்கள தளபதிகள் வலியுறுத்துகின்றனர்.
சுமார் 14,000 வட கொரிய வீரர்கள் போர்க்களத்தில் அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களில் 4,000 க்கும் மேற்பட்டோர் உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வட கொரியாவை விட்டு, வாழ்க்கையில் இருமுறை கூட வெளியே சென்றிராத பலருக்கு தாங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதும் தெரியாது என்றே கூறப்படுகிறது.
மேலும் ரஷ்ய போரில் இணையும் பொருட்டு 100,000 வட கொரிய வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், குர்ஸ்க் பகுதியில், இராணுவ வீரர்கள் இதற்கு முன்பு எந்த மோதலிலும் கண்டிராத பல கொடிய தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.

வட கொரிய வீரர்களே
மட்டுமின்றி, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல்கேரியாவிலிருந்து பீரங்கி மற்றும் மோட்டார் குண்டுகளை முதல் முறையாக வட கொரிய வீரர்கள் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன், ஒரு டசின் நேட்டோ நாடுகளிலிருந்து டாங்கி எதிர்ப்பு மற்றும் மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கி கைக்குண்டு ஏவுகணை குண்டுகளையும் புதிதாக எதிர்கொண்டுள்ளனர்.
வீட்டு உபயோகப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் மற்றும் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களை கண்ணிவெடிகளாக உக்ரைன் இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலும் வட கொரிய வீரர்களே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாள் காலையில், வட கொரிய வீரர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அஞ்சலி செலுத்தும் ஒரு தினசரி இராணுவ சடங்கைச் செய்கிறார்கள். அத்துடன் அவர்கள் தேசியக் கொடியை நெருங்கி, தலைக்கவசங்களைக் கழற்றி, மண்டியிட்டு, கொடியை வணங்குகிறார்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான ஒத்துழைப்பின் போக்கைத் தொடர்வது மட்டுமல்ல, தங்கள் நோக்கம் என்றும், பெரும் அச்சுறுத்தலாக நிற்கும் நவ-நாசிசத்தை ஒழித்து, குர்ஸ்க் நிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் போராடுவதாக வட கொரிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக வட கொரிய வீரர்களை களமிறக்குவதால், ரஷ்யாவிடம் இருந்து பெருந்தொகையை கிம் ஜோங் உன் கைப்பற்றுவதாக கூறப்படுகிறது.
வட கொரிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 2,000 அமெரிக்க டொலர் சம்பளமாக அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தொகை அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை என்றே வட கொரியாவில் இருந்து வெளியேறிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |