ஜப்பான் உரிமைகோரும் குரில் தீவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம்: டோக்கியோ எதிர்ப்பால் பதற்றம்
ஜப்பானின் வடக்கு பிரதேசம் என்று அழைக்கப்படும் குரில்(Kuril) தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புடின் சர்ச்சைக்குரிய பயணம்
ஜப்பானின் வடக்கு பிரதேசம் என அழைக்கப்படும் குரில் தீவுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரலாற்று சிறப்புமிக்க முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த குரில் தீவுகள் 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் சோவியத் யூனியன் படைகளால் கைப்பற்றப்பட்டது.

நீண்ட காலமாக ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த தீவுக் கூட்டம் ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உரசல் புள்ளியாக இருந்து வருகிறது.
புடின் இந்த தீவு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதை கிரெம்ளின் வெளியிட்ட வீடியோ காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் குரில் தீவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளூர் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார், அங்கு அவருக்கு கேவியர் என்ற மீன் முட்டை உணவு வழங்கப்பட்டது.
ஜப்பான் கடும் கண்டனம்
புடினின் இந்த சுற்றுப்பயணத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு பிரதேசம் வரலாற்றிலும், சர்வதேச சட்டத்தின் படியும் ஜப்பானிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி. எனவே ஜப்பானிய அரசு புடினின் இந்த சுற்றுப்பயணத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டெகி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி Whatsapp இல் இணையுங்கள். |