புடினால் கடும் பீதியில் ரஷ்ய மக்கள்... எகிறிய உணவு பண்டங்களின் விலை: பண மதிப்பு சரிவு
உக்ரைன் போர் தொடர்பில் விளாடிமிர் புடின் எடுக்கும் முடிவுகளுக்கு ரஷ்ய பத்திரிகைகள் முதல் முறையாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
மிக ஆபத்தான ஏவுகணை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரப்போவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது. டொனால்டு ட்ரம்பும் தாம் பதவிக்கு வந்த 24 மணி நேரத்தில் போரினை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையிலேயே பதவி விலகவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் வகையில், அமெரிக்க ஆயுதங்களால் ரஷ்ய நகரங்களை தாக்கும் அனுமதியை அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவும் பிரான்சும் தங்கள் ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்க அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு பதிலடியாக தங்களது அணு ஆயுத கோட்பாடுகளை ரஷ்யா புதுப்பித்துள்ளதுடன், அணு ஆயுதம் பொருத்தக் கூடிய மிக ஆபத்தான ஏவுகணையை உக்ரைன் மீது வீசியது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது விளாடிமிர் புடினின் முடிவுகளை ரஷ்ய பத்திரிகைகள் கிழித்து தொங்கவிட்டுள்ளன. விலைவாசி உயர்வு, பண மதிப்பு வீழ்ச்சி என 134 மில்லியன் மக்களும் அவதிப்படும் நிலைக்கு புடின் எடுக்கும் முடிவுகள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளன.
சாதாரண மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், புடின் ஆதரவு பத்திரிகைகளும் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. அன்றாட உணவு பண்டங்களில் ஒன்றான உருளைக்கிழங்கு விலை 65 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த முடிவு
சில பொருட்களின் விலை இந்த ஆண்டு பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் சில சர்வதேச பத்திரிகைகல் பட்டியலிட்டுள்ளன. வெண்ணெய் விலை செப்டம்பர் மாதத்தை விட தற்போது 6.6 சதவீதம் அதிகமாக உள்ளது மற்றும் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், ரஷ்ய மக்களில் பாதி பேர் பால் பொருட்கள் விலை உயர்ந்திருப்பதை நன்கு அறிந்திருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், இந்த நெருக்கடிகளுக்கு காரணம் ரஷ்ய மத்திய வங்கியின் கொள்கைகளே என குறிப்பிட்டுள்ள பத்திரிகைகள் விளாடிமிர் புடினை விமர்சிக்க மறுத்துள்ளன.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் காரணமாக சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரஷ்யா தொடர்பிலான பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளன.
மட்டுமின்றி, சீனா இரண்டாம் நிலை தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சீன வங்கிகள் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா மற்றும் ஹொங்ஹொங்கில் இருந்து பணம் செலுத்துவதற்கான காசோலைகளை கடுமையாக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம், ரஷ்யாவின் மத்திய வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், வட்டி விகிதங்களை 21 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |