பாகிஸ்தானின் அணு ஆயுதங்களால் ஆபத்து - அமெரிக்காவை எச்சரித்த புடின்
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களால் ஆபத்து உள்ளதாக 2001 ஆம் ஆண்டிலே புடின் அமெரிக்காவிற்கு எச்சரிகை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் குறித்து எச்சரித்த புடின்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி இருவருக்குமிடையேயான 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ளது.

ஜூன் 16, 2001 அன்று ஸ்லோவேனியாவில் நடைபெற்ற தணிப்பட்ட சந்திப்பில் பேசிய புடின், "நான் பாகிஸ்தானை குறித்து கவலை கொள்கிறேன். அங்கு ஜனநாயக மக்களாட்சி நடைபெறவில்லை. அது அணு ஆயுதங்கள் கொண்ட ராணுவ குழு.

மேற்குல நாடுகள் இது குறித்து ஏன் விமர்சிப்பதில்லை. இது குறித்து அவர்கள் பேச வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 29, 2005 அன்று ஓவல் அலுவலகக் கூட்டத்தின் போது, "ஈரானிய மையவிலக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் பாகிஸ்தானைச் சேர்ந்தது" என்று புடின் புஷ்ஷிடம் கூறினார்.

"இது எங்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது" என புஷ் தெரிவித்துள்ளார். "எங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்" என புடின் அவரது கவலையை தெரிவித்துள்ளார்.
பர்வேஸ் முஷாரப் தலைமையிலான பாகிஸ்தானின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி இரு நாடுகளின் தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |