உங்களால் எங்களை ஒன்னும் செய்ய முடியாது! மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளால், சோவியத் யூனியனை தனிமைப்படுத்த முடியாது மற்றும் ரஷ்யாவையும் தனிமைப்படுத்த முடியாது என்று புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் Vostochny Cosmodrome-ல் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய புடின், ரஷ்யாவை பாதுகாக்க உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அதன் நோக்கங்களை அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உக்ரைனின் ரஷ்ய எதிர்ப்புப் படைகளுடனான மோதல் தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் போர் 49வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தைரியமாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருகிறது மற்றும் அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது என அவர் கூறினார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இவருக்கு தான் வாக்களிப்பேன்! பொதுவெளியில் அறிவித்த முன்னாள் அதிபர்
மேலும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது என எச்சரித்தார்.
தடைகள் மொத்தமாக விதிக்கப்பட்டன, தனிமைப்படுத்தல் முடிந்தது, ஆனால் சோவியத் யூனியன் இன்னும் விண்வெளியில் முதலிடத்தில் இருக்கிறது.
நாங்கள் தனிமைப்படுத்தப்பட விரும்பவில்லை. நவீன உலகில் யாரையும் கடுமையாக தனிமைப்படுத்துவது சாத்தியமற்றது, குறிப்பாக ரஷ்யா போன்ற ஒரு பரந்த நாட்டை என புடின் தெரிவித்துள்ளார்.