ட்ரம்ப் தூதரை எட்டு மணி நேரம் காக்கவைத்த புடின்
உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ட்ரம்பின் பிரதிநிதியாக மாஸ்கோ சென்ற தூதரை புடின் எட்டு மணி நேரம் காக்கவைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் தூதரை எட்டு மணி நேரம் காக்கவைத்த புடின்
உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) என்பவர் ட்ரம்பின் பிரதிநிதியாக மாஸ்கோ சென்றார்.
இந்நிலையில், அவர் முன் தோரணை காட்டுவதற்காக, அவரை புடின் எட்டு மணி நேரம் காக்கவைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், ஸ்டீவ் மொத்தமே சுமார் 12 மணி நேரம்தான் மாஸ்கோவில் செலவிட்டுள்ளார். அதில் எட்டு மணி நேரம் புடின் அவரைக் காக்க வைத்துள்ளார்.
ஆக, சிறிது நேரமே அவர் கிரெம்ளினில் செலவிட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.
எதற்காக புடின் ட்ரம்ப் தூதரைக் காக்கவைத்தார் என்பது தெரியவில்லை. என்றாலும், ’நான்தான் பாஸ், நான்தான் எப்போது பேசுவது என்பதை தீர்மானிப்பேன், நான் யாருக்கும் நன்றிக்கடன்பட்டவன் அல்ல’ என்பதைக் காட்டவே, வேண்டுமென்றே புடின் ஸ்டீவை காக்கவைத்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், புடின், பெலாரஸ் ஜனாதிபதியான Aleksander Lukashenkoவுடன் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவேண்டி வந்ததாலேயே ஸ்டீவ் காத்திருக்க நேர்ந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |