அணு ஆயுத சூட்கேஸுடன் உக்ரைன் சென்ற புடின்: போர் ஒத்திகையும் நடத்தியதால் அதிர்ச்சி
அணு ஆயுத சூட்கேஸுடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
அணு ஆயுத சூட்கேஸுடன் உக்ரைன் சென்ற புடின்
உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு திடீர் வருகை புரிந்துள்ளார் புடின். அப்போது, அவரது உதவியாளர்களில் ஒருவர் அணு ஆயுத சூட்கேஸை சுமந்துவரும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Credit: East2West
அமெரிக்காவின் அணு ஆயுத கால்பந்து என்னும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் சூட்கேஸைப் போல, இந்த சூட்கேஸ் ரஷ்யாவின் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் விடயமாகும்.
Credit: east2west news
அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் விமானங்களுடன் போர் ஒத்திகை
இந்நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தாங்கிச் செல்லும் திறன்கொண்ட Tu-95MS ரக போர் விமானங்களுடன் திடீர் போர் ஒத்திகையும் நடத்தியுள்ளார் புடின்.
Credit: east2west news
ஆக, இப்படி அணு ஆயுத போர் விமானங்களுடன் போர் ஒத்திகை, அணு ஆயுத சூட்கேஸுடன் உக்ரைன் பயணம் என புடின் எடுத்துவரும் நடவடிக்கைகள், உக்ரைனில் எப்படியாவது, ஏதாவது ஒரு வகையில் வெற்றி பெற்றுவிடவேண்டும் என துடிக்கும் புடின், ஏடாகூடாமாக எதையாவது செய்துவிடுவாரோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.
Credit: Wikipedia
Credit: east2west news
Credit: east2west news
Credit: east2west news