புடினின் இந்தியா வருகை உறுதி: சீனாவில் பாகிஸ்தான், ரஷ்ய தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புடின் - நரேந்திர மோடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இந்தியா மீது கடுமையான வரிவிதிப்புகளை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நெருக்கமான உறவு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
தடைகள் காரணமாக ஐரோப்பிய சந்தையை இழந்த ரஷ்யா, தனது எரிபொருள் ஏற்றுமதியில் பெரும்பகுதியை இந்தியா மற்றும் சீனாவிற்கு திருப்பி அனுப்பியது.
இந்த நிலையில், திங்களன்று சீனாவில் நடைபெறும் பிராந்திய உச்சி மாநாட்டில் விளாடிமிர் புடினும், நரேந்திர மோடியும் சந்திக்க உள்ளனர் என வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களும், 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
SCO இந்தியா, சீனாவைத் தவிர ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.
இருதரப்பு சந்திப்பு
எனவே ஷெபாஸ் ஷெரிஃப், எர்டோகன் போன்ற முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
புடின் உட்பட பிற ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் புடின் இந்தியாவுக்கு வருகை தருவார் என்றும், அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |