அன்புள்ள பெண்களே உங்களால் உலகை மாற்ற முடியும் - மகளிர் தின வாழ்த்துக்கூறி புடின் வெளியிட்ட வீடியோ
சர்வதேச மகளிர் தினத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்ய ஆண்கள் பலர் உயிரிழந்ததால், தங்கள் நாட்டு பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Putin’s message for his female compatriots on International Women’s Day:
— Francis Scarr (@francis_scarr) March 8, 2024
Thank you very much if you’re fighting for me in Ukraine. The rest of you, get cracking! We need more babies! pic.twitter.com/0JvgLSAvZR
அதில், 'அன்புள்ள பெண்களே, உங்கள் அழகு, ஞானம் மற்றும் தாராள இதயங்களுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் நீங்கள் உலகை மாற்ற முடியும். ஆனால், மிக முக்கியமாக உங்களுக்கு பிரசவம் எனும் இயற்கை வழங்கிய பாரிய பரிசுக்கு நன்றி. தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கான அற்புதமான நோக்கம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கிமான விடயம் - அவள் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் என்ன சாதிக்க முடிந்தாலும், குடும்பம் மற்றும் குழந்தைகளை அயராது கவனித்து கொள்வது தான்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ''ஒரு பெண்ணின் இதயத்திற்கு தவிர்க்க முடியாத வலிமை உண்டு என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்மையையும், உண்மையும் எங்கள் பக்கம் உள்ளன என்பதில் உறுதியான வலிமைக்கு நீங்கள் ஒரு உதாரணம்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |