ஆப்கானிஸ்தானில் ‘பயங்கரவாத அச்சுறுத்தல்களை’ கூட்டாக எதிர்த்துப் போராட ரஷ்யா-சீன ஒப்புதல்! வெளியான முக்கிய அறிவிப்பு
தலிபான்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் ‘அச்சுறுத்தல்களை’ எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கூட்டாக முடுக்கிவிட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக ரஷ்ய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.
நேற்று ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஜி 7 தலைவர்கள் விவாதித்தனர்.
ஆனால் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த ரஷ்யா மற்றும் சீனாவின் ஒத்துழைப்பும் தேவைப்படலாம் என்று நிபுணர்கள் கூறினர்.
இந்நிலையில், ரஷ்ய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று தொலைபேசியில் உரையாடினர்.
இந்த உரையாடலின் போது, ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கூட்டாக முடுக்கிவிடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அருகிலுள்ள நாடுகளுக்கு நிலையற்ற நிலை பரவுவதைத் தடுப்பது பற்றியும் அவர்கள் உரையாடினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.